தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தொடரை வெல்லும் முனைப்பில் ஆப்கானிஸ்தான்! டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 12:27 pm

DIN

தொடரை வெல்லும் முனைப்பில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

முதலாவது போட்டியில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியானது கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தானிடம் 6 விக்கெட் வித்தியாத்தில் மண்ணைக் கவ்வியது.

முதல் 10 ஓவர்களில் 40 ரன்களுக்குள்ளாகவே தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் அந்த அணியால் மீளவே முடியவில்லை. ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவை ஆல் அவுட் செய்தும் வரலாற்று சாதனை புரிந்தது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிடி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரைக் கைப்பற்றினால் மேலும் ஒரு வரலாற்று சாதனையைப் படைக்கலாம்.

ஆப்கானிஸ்தான் அணி

ரகுமானுல்லா, ரியாஸ், ரஹமத் ஷா, ஹஸ்மத்துல்லா, இக்ரம், ஒமர்ஜாய், முகமது நபி, ரஷித் கான், அல்லா கசான்பர், ஃபஸல்லா ஃபரூக்கி, கரோட்டே

தென்னாப்பிரிக்கா அணி

டோனி, ஹென்ட்ரிக்ஸ், பவுமா, மார்க்ரம், ஸ்டப்ஸ், கைல், வியான் முல்டர், ஜொர்ன் ஃபோர்டின், பர்கர், பீட்டர், லுன்கி இங்கிடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.