
கோட் படத்தின் ‘மட்ட’ விடியோ பாடல் வெளியானது.
நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் செப்.5ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.
கோட் படத்தில் விஜய்யுடன் சிநேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், யோகிபாபு நடித்துள்ளார்கள். சிவகார்த்திகேயனும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
13 நாள்களில் கோட் திரைப்படம் ரூ.413 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது.
இந்த நிலையில்,கோட் படத்தின் ’மட்ட’ எனத் துவங்கும் பாடலின் விடியோ இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இப்பாடலுக்கு விஜய் உடன் நடிகை திரிஷா நடனமாடி இருந்தார்.
இப்பாடலுக்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்த நிலையில், இணையத்திலும் அதிக பார்வைகள்(Views) கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.