பிக் பாஸ் - 8 நிகழ்ச்சி தொடங்கவுள்ள நிலையில், பிரபலத் தொடர்களின் ஒளிபரப்பும் நேரம் மாற்றம் செய்யப்படவுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் - 8 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 6 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளதாக தொலைக்காட்சி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் போட்டியாளர்கள் வெளிஉலக தொடர்பு இல்லாமல் 100 நாள்களுக்கு உள்ளே தங்கியிருந்து, அவர்களின் தனிப்பட்ட குணங்களை வெளிப்படுத்துவதுதான் இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாகும்.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்கம்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 சீசனின் தொடக்க நாள் நிகழ்வில் இப்போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தெரியவரும். திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்களிம் நேர மாற்றம்
இந்த நிலையில், வரும் அக்டோபர் 7 முதல் வார நாள்களிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுவதால், அந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்களின் நேரம் மாற்றப்படுகிறது.
அதன்படி, பனி விழும் மலர் வனம் தொடர் பிற்பகல் 1 மணிக்கும், வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் பிற்பகல் 3.30 மணிக்கும், நீ நான் காதல் தொடர் மாலை 6 மணிக்கும், மகா நதி தொடர் மாலை 6.30 மணிக்கும், சின்ன மருமகள் தொடர் இரவு 7.00 மணிக்கும் ஒளிபரப்பாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், இது தொடர்பாக தொலைக்காட்சி நிர்வாகம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.