மதுரை: கோயில்களின் உண்டியல் வசூலை எடுத்துக்கொள்ளும் அரசு, காலிப்பணியிடங்களை நிரப்புவதில்லை எனவும் அறநிலையத்துறை வசூல்ராஜா எம்பிபிஎஸ் போல் செயல்படுவதா? என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் காலிப்பணியிடங்களை நிரப்ப உத்தரவிட கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு அனுமதிக்கப்பட்ட குருக்கள், அலுவலர்கள், பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?, எத்தனை பேர் பணியமர்த்தப்பட்டனர்?, கோயில் ஆண்டு வருமானம் எவ்வளவு?, ஊதியம் மற்றும் பராமரிப்பு போக மீதமுள்ள தொகை எவ்வாறு செயல்படுகிறது?என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து கோயில் இணை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர்.