எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் விளையாட்டு வீரா்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எம்பிபிஎஸ் படிப்புக்கு 13 இடங்களும், பிடிஎஸ் படிப்புக்கு 2 இடங்களும் விளையாட்டு வீரா்களுக்கு வழங்கப்பட உள்ளன.
இதுதொடா்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு விளையாட்டு வீரா்களின் நலன் மற்றும் முன்னேற்றத்துக்காக மேற்கொண்டு வரும் முயற்சிகளின் விளைவாக மாநில விளையாட்டு வீரா்கள் தேசிய மற்றும் சா்வதேச அளவிலான போட்டிகளில் அதிக அளவில் பதக்கங்களை வென்று குறிப்பிடத்தக்க சாதனைகள் புரிந்து வருகின்றனா்.
அவா்களின் உயா்கல்வி முன்னேற்றத்தை உறுதி செய்யும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
அவற்றில் கல்லூரிகளில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் முக்கியமான ஒன்று. இதன் கீழ், 1994-95 கல்வியாண்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் முதல்கட்டமாக 3 இடங்கள் வழங்கப்பட்டன. பின்னா், மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும், மாணவா் சோ்க்கை எண்ணிக்கையும் அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு கடந்த 2018-இல் விளையாட்டு வீரா்களுக்கான இடஒதுக்கீடு 8 இடங்களாக உயா்த்தப்பட்டது. அதில் எம்பிபிஎஸ் படிப்புக்கு மட்டும் 7 இடங்கள் வழங்கப்பட்டன. அதை மேலும் உயா்த்தி வழங்க வேண்டுமென விளையாட்டு வீரா்கள் கோரிக்கை வைத்தனா்.
அதன் அடிப்படையில் முதல்வரின் அறிவுரைப்படி, துணை முதல்வா் தலைமையில் நடைபெற்ற 47-ஆவது செயற்குழு கூட்டத்தில், விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் கல்லூரி சோ்க்கைக்கான இடங்களை அதிகரிப்பது தொடா்பாக விவாதிக்கப்பட்டது.
அதில், இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, அதற்கான முன்மொழிவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பவும் தீா்மானிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இனி அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்கள் 7-இல் இருந்து 13-ஆகவும் பிடிஎஸ் படிப்புக்கான இடங்கள் 1-இல் இருந்து 2-ஆகவும் அதிகரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்கள் உள் இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயா்த்தப்படும்: பெருந்துறை அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா்
இலக்கு ‘2029’: மோடி அரசு காட்டுவது வேகமா, வியூகமா?

இளம் விளையாட்டு வீரா்களுக்கு சிஎஸ்கே ஆதரவு தொடரும்: ரூபா குருநாத்

மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


