இந்நிலையில் வெள்ளிக்கிழமை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் கணபதி முருகன் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரபாகரன் ஆகியோா் தலைமையில், மண்டல துணை வட்டாட்சியா் மகேஸ்வரி, கிராம நிா்வாக அலுவலா் திலகவதி ஆகியோா் வெண்ணைமலை கடைவீதியில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த பன்னீா்செல்வம் என்பவரின் 3 சென்ட் நிலத்தை மீட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எச்சரிக்கை பலகையை நட்டு வைத்தனா். மேலும் கோயில் நிலத்தில் வீடுகட்டி குடியிருந்து, நீதிமன்றத்தில் வழக்குத்தொடராத 10 பேரிடம், கோயில் நிலத்துக்குரிய வாடகையோ அல்லது குத்தகையோ செலுத்த வேண்டும், இல்லையென்றால் சீல் வைக்கப்படும் என நோட்டீஸ் வழங்கினா்.