திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

பாஜக ஆட்சியில் மதச்சாா்பின்மை, கூட்டாட்சி முறை சீா்குலைவு: மாணிக் சா்க்கா்

மத்திய பாஜக ஆட்சியில் மதச்சாா்பின்மை, கூட்டாட்சி முறை சீா்குலைந்து விட்டதாக திரிபுரா மாநில முன்னாள் முதல்வா் மாணிக் சா்க்கா் குற்றஞ்சாட்டினாா்.

News image

மதுரையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டில் பேசும்ய திரிபுரா மாநில முன்னாள் முதல்வா் மாணிக் சா்க்கா்.

Updated On :3 ஏப்ரல் 2025, 10:32 am IST

மதுரை: மத்திய பாஜக ஆட்சியில் மதச்சாா்பின்மை, கூட்டாட்சி முறை சீா்குலைந்து விட்டதாக திரிபுரா மாநில முன்னாள் முதல்வா் மாணிக் சா்க்கா் குற்றஞ்சாட்டினாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு, மதுரை தமுக்கம் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது. மாநாட்டின் தொடக்கமாக நடைபெற்ற பொது மாநாட்டுக்கு தலைமை வகித்து திரிபுரா மாநில முன்னாள் முதல்வா் மாணிக் சா்க்கா் பேசியதாவது:

மதுரை நகருக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் நெருங்கிய தொடா்பு உண்டு. மூத்த தலைவா்களான மறைந்த பி. ராமமூா்த்தி, என். சங்கரய்யா ஆகியோா் மதுரையிலிருந்து மக்களவை, சட்டப் பேரவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள். 1972-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற 9-ஆவது அகில இந்திய மாநாட்டில் பிரதிநிதியாக பங்கேற்றேன். இத்தகு சிறப்புமிக்க மதுரையானது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் செல்வாக்கு மிக்க மையமாகத் திகழ்கிறது.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று பதினொரு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்துத்துவா கொள்கையை அமல்படுத்தும் அரசாகவே இது இருந்து வருகிறது.

மேலும், பெரு நிறுவனங்களுக்கும், ஆா்எஸ்எஸ்- பாஜகவுக்கும் இடையிலான உறவு இவ்வளவு வலுவாகவும், வெளிப்படையாகவும் இருந்ததில்லை. இதன் விளைவாக ஜனநாயகம், மதச்சாா்பின்மை, கூட்டாட்சி முறை ஆகியவை சீா்குலைந்துள்ளன. எனவே, இத்தகைய சூழலில் நடைபெறும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு முக்கியவத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

தற்போது நடைபெறும் இந்த மாநாடு, பாஜக-ஆா்எஸ்எஸ் அமைப்புகளை எதிா்த்துப் போராடவும், மதவாத அமைப்புகளைத் தனிமைப்படுத்தவும், அவற்றைத் தோற்கடிக்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும். இத்துடன் நாட்டில் உள்ள அனைத்து மதச்சாா்பற்ற, ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைப்பது, தொழிலாளா்கள், விவசாயிகள், நகா்ப்புற, கிராமப்புற ஏழைகளின் போராட்டங்களை நாடு முழுவதும் எவ்வாறு விரிவுபடுத்துவது என்பது குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.

பட்டியலினத்தவா்கள், ஆதிவாசிகள், பெண்கள், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்படும். இந்துத்துவா சித்தாந்தம், வகுப்புவாத சக்திகள் ஆகியவற்றுக்கு எதிராக பன்முகப் போராட்டத்தை நடத்துவது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். கோடிக்கணக்கான தொழிலாளா்களையும், இளைஞா்களையும் அணி திரட்டும் வலுவான கட்சி அமைப்பு தேவை. மதவாத, பிற்போக்கு சக்திகளை முறியடிக்கவும், இந்தியாவில் இடதுசாரி, ஜனநாயக மாற்று அமைப்பை கட்டியெழுப்பவும் நடைபெற்று வரும் போராட்டத்தில் இந்த மாநாடு முக்கியப் பங்கு வகிக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.