நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வக்ஃப் மசோதாவுக்கு எதிர்ப்பு: காஞ்சிபுரத்தில் தவெக ஆர்ப்பாட்டம்!

முஸ்லீம்களுக்கு எதிரான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம்

News image

காஞ்சிபுரத்தில் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர்.

Updated On :4 ஏப்ரல் 2025, 7:15 am

DIN

காஞ்சிபுரம்: முஸ்லீம்களுக்கு எதிரான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் சமூக-மத ரீதியிலான பணிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்படும் வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் நோக்கில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டு திருத்தங்களுடன் மீண்டும் இரு அவைகளிலும் தாக்கல் செய்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை மாவட்ட தலைநகரங்களில் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் மாவட்ட தலைவர் எஸ். கே. பி. தென்னரசு தலைமையில் முஸ்லீம்களுக்கு எதிரான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை கண்டித்தும், அதனை திரும்ப பெறக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்ட தவெகவினர் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும், இதனை திரும்பப் பெறும் வரை தவெக போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.