பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார் காலமானார்

பாலிவுட் திரையுலக ஜாம்பவான் மனோஜ் குமார் மறைவு பற்றி...
நடிகர் மனோஜ் குமார்
நடிகர் மனோஜ் குமார்
Published on
Updated on
1 min read

மும்பை: ஹிந்தி திரையுலகின் ஜாம்பவானும் பழம்பெரும் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மனோஜ் குமார்(87) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை அதிகாலை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார்(87) வயது முதிர்வு மற்றும் சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பு காரணமாக வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையிலேயே காலமானார் என்பதை அவரது குடும்ப நண்பரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அசோக் பண்டிட் உறுதிப்படுத்தினார்.

1937 ஜூலை 24 ஆம் தேதி பஞ்சாபின் அமிர்தசரஸில் பிறந்த மனோஜ் குமார், ஹிந்தி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். தனது வாழ்நாள் முழுவதும், தேதத்தின் பெருமை மற்றும் ஒற்றுமை உணர்வை மையமாகக் கொண்ட படங்களில் நடிப்பு மற்றும் இயக்கத்திற்காக அறியப்பட்டார்.

"ஷாஹீத்", "உப்கார்" மற்றும் "புரப் அவுர் பஸ்சிம்" போன்ற பிரபலமான தேசபக்தி படங்களில் நடித்ததற்காக 'பாரத் குமார்' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட இவருக்கு, இந்திய கலைகளுக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு 1992 இல் பத்மஸ்ரீ விருது, 2015 இல் இந்திய சினிமாவின் மிக உயர்ந்த அங்கீகாரமான தாதாசாகேப் பால்கே விருதையும் வழங்கி கௌரவித்தது மற்றும் பல்வேறு பிரிவுகளில் ஏழு பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், வசனகர்த்தா, பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கியவர்.

அவரது மறைவு திரைப்படத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை கவலையும் ஏற்படுத்தியுள்ளது, பலர் தங்கள் அஞ்சலி, இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அவரது மறைவுக்கு குடும்ப நண்பரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அசோக் பண்டிட் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com