தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மியான்மர் நிலநடுக்கம்: மீட்புப் பணியில் இலங்கை ராணுவம்!

மியான்மர் நாட்டில் இலங்கை ராணுவப் படைகள் மீட்புப் பணியில் ஈடுபடுவதைப் பற்றி...

News image
மியான்மர் நிலநடுக்கம்
Updated On :5 ஏப்ரல் 2025, 5:52 am

DIN

மியான்மர் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அங்கு மீட்புப் பணிகளை மேற்கொள்ள 3 ராணுவப் படைகளை அனுப்பவுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தினால் ஏராளமான மக்கள் பலியானதுடன் இடிபாடுகளினுள் சிக்கியவர்களை மீட்கும் பணியானது ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது.

இதில், சர்வதேச நாடுகளும் உதவிக்கரம் நீட்டி மியான்மரில் மீட்புப் பணியில் ஈடுபட்டு நிலையில் தற்போது அதில் இலங்கையும் இணைந்துள்ளது.

அந்நாட்டில் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து கட்டட இடிபாடுகளினுள் சிக்கியுள்ள மக்களுக்கும் அரசுக்கும் உதவ மீட்பு, நிவாரணம் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய 3 ராணுவப் படைகளை மியான்மருக்கு அனுப்பவுள்ளதாக இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சிறப்பு விமானம் மூலம் நிவாரணப் பொருள்கள் மற்றும் ராணுவப் படையினர் இன்று (ஏப்.5) மியான்மர் செல்லவுள்ளனர். மேலும், நிவாரண நிதியாக இலங்கை அரசின் சார்பில் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படவுள்ளன.

இதனிடையே, மியான்மர் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் வரலாற்று ரீதியாக புத்தமத பிணைப்புள்ளதினால், இலங்கையின் புத்த மதக்குழுக்கள் நிவாரணப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், புத்தமதத்தின் புனித தளங்களில் ஒன்றான தி டெம்பிள் ஆஃப் டூத் சார்பில் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரூ.1.5 கோடி மியான்மர் நிலநடுக்க மீட்புப் பணிக்காக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மியான்மரில் கடந்த மார்ச்.28 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 3,100-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 5,000 பேர் படுகாயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.