ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உத்தரகண்ட்: 15 சிறைக் கைதிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று!

உத்தரகண்டில் 15 புதிய சிறைக்கைதிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image
கோப்புப் படம்
Updated On :9 ஏப்ரல் 2025, 3:54 pm

DIN

உத்தரகண்ட் மாநிலத்தின் சிறையில் 15 புதிய சிறைக் கைதிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஹரித்வார் மாவட்ட சிறையில் அடைக்க அழைத்து வரப்பட்ட புதிய சிறைக் கைதிகளுக்கு கடந்த ஏப்.7-ஆம் தேதி மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தச் சோதனைகளின் ஒரு பகுதியாக எச்.ஐ.வி. சோதனையும் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

இந்நிலையில், அவ்வாறு புதியதாக அழைத்து வரப்பட்ட கைதிகளில் 15 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக அந்த சிறையின் தலைமைக் காவலர் மனோஜ் குமார் ஆர்யா இன்று (ஏப்.9) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சிறைக்கு புதியதாக ஒரு கைதி அழைத்து வரப்பட்டால் அவருக்கு எச்.ஐ.வி. உள்பட அனைத்து விதமான மருத்துவச் சோதனைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தற்போது அந்தத் தொற்றுக் கண்டறியப்பட்ட 15 கைதிகளுக்கு முறையான மருத்துவச் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் கண்டறியப்பட்ட எச்.ஐ.வி. தொற்றுக்களின் எண்ணிக்கையானது 2010-ல் பதிவான எண்ணிக்கையை விட 44 சதவிகிதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.