
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 காவலர்கள் கொல்லப்பட்டனர்.
பலூசிஸ்தான் தலைநகர் குவேட்டாவின் சரியாப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் வாகனத்தின் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு ஆய்வாளர் உள்ளிட்ட 3 காவலர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் அவர்களது வாகனத்தில் அமர்ந்திருந்த காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் உள்பட 2 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அம்மாகாணத்தின் நோஷ்கி பகுதியில் நேற்று (ஏப்.9) பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். சமீபத்தில், பாகிஸ்தான் படையினர் மீதான கொரில்லா பாணி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், பலூச் கிளர்ச்சியாளர்கள்; பாகிஸ்தான் அதிகாரிகளின் மீது தாக்குதல் நடத்துவதுடன் அந்நாட்டின் வளமிக்க பலூசிஸ்தான் மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சீனா - பாகிஸ்தான் திட்டங்களைக் குறிவைத்தும் தாக்குதல்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:நள்ளிரவில் யேமன் தலைநகர் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்! 3 பேர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.