
தெலங்கானாவில் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதைக் கண்டுபிடித்த ஆசிரியரை 7-ம் வகுப்பு மாணவர் ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார்.
ஹைதராபாத்திலுள்ள பள்ளிக்கூடத்தில் கடந்த ஏப்.9 அன்று நடத்தப்பட்ட தேர்வில் 7-ம் வகுப்பு மாணவர் ஒருவர் பார்த்து எழுதியுள்ளார். அதனைக் கண்டுபிடித்த ஆசிரியர் ஒருவர் அந்த மாணவனை அங்கிருந்து இடமாற்றி வேறொரு இடத்தில் அமர வைத்துள்ளார்.
இதனால், தான் அவமானமடைந்ததாகக் கருதிய அந்த மாணவன் பள்ளிக்கூடத்தின் மணியை அடிக்க பயன்படுத்தும் இரும்புக் கம்பியால் அந்த ஆசிரியரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இந்நிலையில், மாணவனின் இந்தத் தாக்குதலில் அந்த ஆசிரியருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த மாணவனின் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:உ.பி: அம்பேத்கர் சிலையை அகற்றியதால் சர்ச்சை!