மாற்றுத்திறனாளிகள் பற்றி பேசியதற்கு வருத்தம் தெரிவித்த துரைமுருகன்!
மாற்றுத்திறனாளிகளை தவறான பெயர் கொண்டு உச்சரித்ததாகக் கூறி அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவறுக்கும் பெயர் கொண்டு, அவர்களை அழைத்து வந்ததை முன்னாள் முதல்வர் கருணாநிதி கருணை உள்ளத்தோடு "மாற்றுத் திறனாளிகள்"" என்று பெயரிட்டு அழைத்தார். அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம்.
அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்துவிட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் என் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, நான் அதிர்ச்சியும் - வருத்தமும் அடைந்தேன்.
கருணாநிதியால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப் பெரிய தவறாகும். மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
முதல்வர் ஸ்டாலின், எந்தளவிற்கு வருந்தியிருப்பார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கும் என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | திமுக துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமனம்!
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில், பெண்கள் குறித்து ஆபாசக் கருத்தை வெளியிட்ட அமைச்சர் பொன்முடி, துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் துரைமுருகன் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவி பறிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.