திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பொன்முடிக்கு பதிலாக, திமுக துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமனம்!

திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமிக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

News image

திமுக எம்.பி. திருச்சி சிவா

Updated On :11 ஏப்ரல் 2025, 11:37 am IST

திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமிக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பெண்கள் குறித்து ஆபாசக் கருத்தை வெளியிட்ட அமைச்சர் பொன்முடி, துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், அந்த பதவிக்கு தற்போது திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி, விலைமாதுவைக் குறிப்பிட்டு பெண்கள் பற்றி கொச்சையான கருத்துகளைக் கூறியிருந்தார்.

பொதுக்கூட்ட மேடையில் பொன்முடி பேசிய காணொலி தற்போது வைரலான நிலையில், சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளன. திமுக எம்.பி. கனிமொழியும் பொன்முடியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி விடுவிக்கப்படுவதாக கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து, திமுக துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழக சட்டதிட்ட விதி: 17 பிரிவு 3-ன்படி கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா, எம்.பி.யை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.