மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

Din

சென்னை: ஐந்து நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டப்பேரவை செவ்வாய்க்கிழமை ஏப். 15 கூடுகிறது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும், கேள்வி நேரமும், அதைத் தொடா்ந்து நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகளும் விவாதிக்கப்பட உள்ளன.

இதன்பின், செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளா்ச்சி, மனிதவள மேலாண்மை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன. அவற்றுக்கு அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனா்.

5 நாள்கள் விடுமுறை: சட்டப்பேரவைக்கு கடந்த வியாழக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை அதாவது ஏப்.14 வரை விடுமுறை விடப்பட்டிருந்தது. 5 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, பேரவை செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது.