அரிசியால் உண்டாகும் புற்றுநோய்? 2050-க்குள் பாதிப்படையும் இந்தியா?

ஆசிய நாடுகளின் அரிசியைப் பற்றிய புதியதொரு தகவலைப் பற்றி...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

வரும் 2050-க்குள் ஆசிய நாடுகளில் உற்பத்தியாகும் அரிசியினால் அந்நாடுகளின் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கக் கூடும் என அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் காலநிலை வெப்பம் 2 டிகிரி செல்சியஸ்-க்கும் மேலாக உயர்வதினாலும், கார்பன் டை ஆக்சைடு வாயு அதிகரிப்பதினாலும் மண்ணின் ரசாயணத் தன்மை மாறுபடும் என்றும் அதனால் அதில் உண்டாகும் இயற்கையல்லாத ஆர்சனிக் (ஆர்கானிக் ஆர்சனிக்) எனும் அமிலம் அதிகரித்து மண்ணிலிருந்து நெற்ப் பயிருக்குள் உறிஞ்சப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், நெல் வளர்ப்பின்போது மாசுப்பெற்ற மண்ணாலும், பாசனத்துக்குப் பயன்படுத்தப்பட்ட தண்ணீராலும் அரிசியில் உள்ள இயற்கையல்லாத ஆர்சனிக் அதிகரிக்கக் கூடும் எனவும் ஆர்சனிக் அமிலம் அதிகம் உட்கொள்ளப்படுவதினால் நுரையீரல், சிறுநீர்ப்பை மற்றும் தோல் போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்களின் அபாயம் அதிகரிப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், அரிசி சமையலுக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரிலிருந்தும் கூடுதல் ஆர்சனிக்கை உறிஞ்சிவிடும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் லீவிஸ் ஸிஸ்கா கூறுகையில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளின் மூலம் ஆர்சனிக் அமிலம் அதிகரிப்பதினால் நீரிழிவு நோய், இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் அல்லாத உடல் பாதிப்புகளும் ஏற்படக் கூடும் எனவும் உலகின் பெரும்பாலான நாடுகளில் அரிசி பிரதானமான உணவாக உட்கொள்ளப்படுவதினால், உலகளவில் புற்றுநோய், இதய நோய் ஆகியவை பெரும் சுமையாக மாறக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அரசியைப் பிரதான உணவாக தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளான இந்தியா, சீனா, பிலிப்பின்ஸ், வங்கதேசம், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் உட்கொண்டு வருகின்றனர்.

எனவே, வரும் 2025-ம் ஆண்டுக்குள் அந்நாடுகளின் மக்களின் ஆரோக்கியத்திற்கு அரிசி மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவாகக் கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் 10 ஆண்டுகளில் 28 வகை அரிசிகளில் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் கார்பன் டை ஆக்சைட் ஆகியவற்றின் விளைவுகளை ஆராய்ச்சியாளர்கள் அளவிட்டுள்ளனர்.

இருப்பினும், அரிசியிலுள்ள ஆர்சனிக் அமிலத்தின் மீதான கார்பன் டை ஆக்சைட் மற்றும் வெப்பநிலைகளின் ஒருங்கிணைந்த விளைவுகள் (கம்பைண்ட் எஃபெக்ட்ஸ்) குறித்து இதுவரை விரிவான ஆய்வுகள் செய்யப்படவில்லை என ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

இதில், அரிசியில் உண்டாகும் இயற்கையல்லாத ஆர்சனிக்கின் விளைவாக பாதிக்கப்படப் போகும் நாடுகளில் சீனா முதல் இடத்தில் உள்ளதெனவும்; அந்நாட்டில், சுமார் 1.34 கோடி பேருக்கு புற்றுநோய் ஏற்படக் கூடும் எனவும் அந்த ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:யேமனின் எண்ணெய்த் துறைமுகத்தின் மீது அமெரிக்கா தாக்குதல்! 74 பேர் பலி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com