சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

யேமனின் எண்ணெய்த் துறைமுகத்தின் மீது அமெரிக்கா தாக்குதல்! 74 பேர் பலி!

யேமனில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 58 கொல்லப்பட்டதைப் பற்றி...

News image

யேமனின் எண்ணெய்த் துறைமுகத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டனர்.

Updated On :18 ஏப்ரல் 2025, 7:20 pm IST

யேமன் நாட்டின் எண்ணெய்த் துறைமுகத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 பேர் கொல்லப்பட்டனர்.

யேமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சிப்படையின் கட்டுப்பாட்டிலுள்ள ராஸ் இஸா எண்ணெய்த் துறைமுகத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 பேர் கொல்லப்பட்டதுடன், 171-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக இன்று (ஏப்.18) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த மார்ச்.15 முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆட்சியில் நடத்தப்பட்ட மிகப் பயங்கரமானத் தாக்குதல் எனக் கூறப்படும் இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து அமெரிக்க ராணுவம் தரப்பிலிருந்து எந்தவொரு விரிவானத் தகவலும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

ஆனால், யேமன் மீதான அமெரிக்காவின் தாக்குதல் தற்போது தீவிரமடைந்துள்ளதையும், அதில் ஏராளமானோர் பலியானதையும் உறுதிப் படுத்தும் விதமாக ஹவுதிகள் வெளியிட்ட விடியோவில் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் பரவிக்கிடப்பது பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் ஆதரவுப் பெற்ற ஹவுதி கிளர்ச்சிப்படையின் எரிப்பொருள் மூலாதாரத்தை அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் அந்நாட்டு மக்களை அச்சுறுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (ஏப்.18) இஸ்ரேலைத் தாக்கும் நோக்கில் ஹவுதி படைகள் செல்லுத்திய ஏவுகணைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

யேமனின் கமரதான் தீவின் அருகிலுள்ள ராஸ் இஸா எண்ணெய்த் துறைமுகத்தின் மீதான அமெரிக்காவின் தாக்குதலில் அங்கு பணிப்புரிந்த தொழிலாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹவுதி கிளர்ச்சிப்படையின் செய்தித் தொலைக்காட்சியில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.