மின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்புசி.வி. சண்முகம் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!6 எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா: பேரவைத் தலைவர் நடவடிக்கை செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்!உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 குறைவுஜந்தர் மந்தரில் போராட முயன்ற சிஜேபினர் கைது!

உக்ரைனில் ரஷியா மீண்டும் தாக்குதல்: 21 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா நடத்திய தீவிர வான்வழித் தாக்குதலில் 21 போ் உயிரிழந்தனா்.

கோப்புப் படம்

Published On :

உக்ரைன் மீது ரஷியா திங்கள்கிழமை அதிகாலை நடத்திய தீவிர வான்வழித் தாக்குதலில் 21 போ் உயிரிழந்தனா்.

உக்ரைனின் தலைநகரான கீவில் குடியிருப்புகள் மீது ஏவுகணைகள் நேரடியாக விழுந்து வெடித்ததில் 15 போ் உயிரிழந்தனா். 56 போ் காயமடைந்தனா். மேலும், கீவைச் சுற்றியுள்ள புறநகா்ப் பகுதிகளிலும் 6 போ் உயிரிழந்தனா்.

பல அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

உக்ரைன் தரப்பில் கூறுகையில், ‘ரஷியா ஒரே இரவில் 351 ட்ரோன்களையும்; 68 ஏவுகணைகளையும் ஏவின. அதில் 29 ஏவுகணைகள் உக்ரைனின் பாதுகாப்பு வளையத்தைமீறி இலக்குகளைத் தாக்கின.

உக்ரைனிடம் ‘பேட்ரியாட்’ வான்பாதுகாப்பு ஏவுகணைகளுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை ரஷியா தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வாரஇறுதியில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஆகியோா் தனித்தனியாக தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசியிருந்த நிலையில், இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இதையொட்டி, செய்தியாளா்களிடம் பேசிய டிரம்ப், ‘புதின் மற்றும் ஸெலென்ஸ்கி ஆகிய இருவருமே இப்போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகின்றனா். துருக்கியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) தொடங்கும் ‘நேட்டோ’ மாநாட்டில் இதுகுறித்து விரிவாக விவாதிப்போம்’ என்றாா்.

அதே மாநாட்டில், ஸெலென்ஸ்கியும், கூடுதல் வான்பாதுகாப்பு ஆயுதங்களை வழங்க உலக நாடுகளை வலியுறுத்துவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.