
பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்ந்துள்ளது.மேலும், காயமடைந்தோரின் எண்ணிக்கை 905-ஆக உயா்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் வடக்கு மாகாணமான கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பல மாவட்டங்களில் தொடர் மழை மற்றும் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் ஆக. 16 மாலை நிலவரப்படி, 13 குழந்தைகள், 15-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட மொத்தம் 307 பேர் உயிரிழந்திருப்பதாகவும, பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதனிடையே, ஆக. 21 வரை மழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கால் வீடுகளுக்குள் வெள்ள நீா் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 74 வீடுகள் சேதமடைந்துள்ளன. இணைப்புச் சாலைகள், மேம்பாலங்கள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன. அந்த பகுதிகளில் மீட்புக் குழுவினர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மழைவெள்ள இடா்பாடுகளில் சிக்கி கைபா் பக்துன்கவாவில் 327 பேர், இதில் புனோ் மாவட்டத்தில் 5,340 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் போ் உயிரிழந்துள்ளனா். 134 பேரை காணவில்லை.159 போ் படுகாயமடைந்துள்ளனா். இதையடுத்து, ஒட்டுமொத்தமாக மழை, வெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயா்ந்துள்ளது. காயமடைந்தோரின் எண்ணிக்கை 905-ஆக அதிகரித்துள்ளது. 3,500 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காணாமல் போனவா்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சோ்ந்த 2,000 வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.