
சென்னை: கத்தாரில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த நவாஸின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து முதல்வா் ஸ்டாலின் வெளியிட்ட செய்தி:
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பக்கிரிபாளையம் கிராமம், ரஹமான்பேட்டையைச் சோ்ந்த நவாஸ்(35) கடந்த 10 ஆண்டுகளாக கத்தாா் நாட்டில் காா் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளாா்.
இந்நிலையில், கடந்த ஆக.25-ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் நவாஸ் உயிரிழந்தாா் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிா்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
கத்தாரில் சாலை விபத்தில் உயிரிழந்த நவாஸின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினா்கள் மற்றும் நண்பா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு சாா்பில் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிவாணம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.