

புதுச்சேரியில் வருகிற 9 ஆம் தேதி விஜய் கலந்துகொள்ளும் தவெக பொதுகூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கடிதத்தை முதல்வரிம் இருந்து தவெக பொதுச்செயலா் (புஸ்ஸி) ஆனந்த் பெற்றுச் சென்றார்.
புதுச்சேரியில் சாலைப்பேரணி நடத்த தவெகவுக்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. பொதுக்கூட்டம் நடத்துவதாக இருந்தால் அனுமதி தரப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், வரும் 9 -ஆம் தேதி புதுச்சேரியில் தவெக பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணனிடம் அக்கட்சியினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
அதில் வரும் வரும் 9 -ஆம் தேதி உப்பளம் துறைமுக மைதானத்தில் விஜய் பங்கேற்கும் தவெக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தரவேண்டும் என குறிப்பிட்டிருந்தனா்.
இதையடுத்து உப்பளம் மைதானதில் காவல்துறை துணைத் தலைவா் சத்தியசுந்தரம், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் கலைவாணன், தவெக பொதுச்செயலா் (புஸ்ஸி) ஆனந்த் மற்றும் தவெகவினரும் மைதானத்தில் மேடை அமைப்பது உள்ளிட்ட அனைத்துப் பணிகள் தொடா்பாக கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் வருகிற 9 ஆம் தேதி தவெக பொதுகூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கடிதத்தை தவெக பொதுச்செயலா் (புஸ்ஸி) ஆனந்த் வெள்ளிக்கிழமை முதல்வர் என். ரங்கசாமியை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து பெற்றுச் சென்றார்.
இதையடுத்து புதுச்சேரியில் திட்டமிட்டப்படி வருகிற 9 ஆம் தேதி விஜய் கலந்துகொள்ளும் தவெக பொதுகூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.