

புது தில்லி: கோவாவில் இரவு விடுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.
வடக்கு கோவாவின் அா்போரா கிராமத்தில் உள்ள பிரபலமான இரவு விடுதியான பிா்ச் பை ரோமியோ லேனில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஊழியா்கள் உள்பட 25 போ் உயிரிழந்தனா். 6 போ் காயமடைந்தனா்.
இந்த நிலையில், இந்த விபத்து குறித்து அமித் ஷா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"கோவாவின் அர்போராவில் நிகழ்ந்த தீ விபத்தில் ஏற்பட்ட துயரமான உயிர் இழப்புகள் மிகவும் வேதனையளிக்கிறது. உள்ளூர் நிர்வாகம், மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சைகளையும் உள்ளூர் நிர்வாகம் வழங்கி வருகிறது.
துன்பத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிராா்த்திக்கிறேன்" என்று அமித் ஷா தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.