

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ ரயில் பற்றியும், மதுரை எய்ம்ஸ் பற்றியும் ஏன் சிந்திக்கவில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம், பிரமாண்டமான கீழடி அருங்காட்சியகம், உலகத் தரத்தில் ஹாக்கி மைதானம், இவைதான் திராவிட மாடல் பேசும் மதுரைக்கான வளர்ச்சி அரசியல்.
மதுரையில் எய்ம்ஸ் வராது; மெட்ரோ ரயில் தராது; கீழடி ஆய்வறிக்கையை மறைக்கும் பாஜக பேசும் …….. அரசியல் என முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், மதுரையில் கட்டிய மேம்பாலங்களை பட்டியலிட்ட முதல்வர், ஐந்து முறையை ஆட்சியில் இருந்த நீங்கள்(திமுக) மதுரைக்கு என்ன பெரிய தொழிற்சாலை கொண்டு வந்தீர்கள்? மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ ரயில், மதுரை எய்ம்ஸ் பற்றியெல்லாம் ஏன் சிந்திக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பதிவில் வெயிட்டிருப்பதாவது:
மதுரையில் கட்டிய மேம்பாலங்கலை பட்டியலிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.
1. இன்று மதுரையில் கட்டிய மேம்பாலங்களை பட்டியலிட்டீர்கள் அது அடிப்படைக் கட்டமைப்பு ஆனால் ஐந்து முறை ஆட்சியில் நீங்கள் மதுரைக்கு என்ன பெரிய தொழிற்சாலை முன் கொண்டு வந்தீர்கள் ?
2. இன்று மெட்ரோ ரயிலுக்கு சரியான கட்டமைப்பு அறிக்கையை சமர்ப்பிக்காமல்.. நிர்வாக ரீதியாக ரீதியாக மறுக்கப்பட்டதை.. மத்திய அரசு பாராபட்சமாக மறுக்கிறது என்று சொல்கிறீர்களே... உங்கள் சகோதரரே மதுரையில் அரசியல் செய்தவர் மத்தியில் அமைச்சராக இருந்தார் அப்பொழுது ஏன் மெட்ரோ ரயில் பற்றியும் சிந்திக்கவில்லை மதுரை எய்ம்ஸ் பற்றியும் சிந்திக்கவில்லை. நீங்கள் அமைச்சரவையில் இடம் பெற்ற போது உடனே அனுமதி பெற்று இவை எல்லாம் நீங்கள் நிறைவு செய்து இருக்கலாமே.
3. இந்த பாசக்கார மதுரை அஞ்சா நெஞ்சாகர்களினால் அரசியல் செய்யப்பட்டபோது மதுரை எந்த அளவிற்கு கவனிக்கப்பட்டது என்பது மதுரை மக்களுக்கு நன்றாக தெரியும் .
4. மத்திய அரசு இளைஞர்களை பக்கோடா வைக்க சொன்னது என்று அப்பட்டமான பொய் சொல்கிறீர்கள் இன்று ஸ்டார்ட் அப் இந்தியா ஸ்டாண்ட் அப் இந்தியா என்று உலகிலேயே அதிக தொழில் முனைவோர்கள் இளைஞர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள் என்பதும்.. குறிப்பாக முத்ரா வங்கி என்று தொழில் தொடங்க கடன் கொடுக்கப்பட்டதில் அதில் தமிழகத்தில் உள்ள பெண்களும் பட்டியலின சகோதர சகோதரிகளும் தான் அதிகம் பலன் அடைந்திருக்கிறார்கள் என்பதும் நாடறிந்த உண்மை... ஆக மத்திய அரசு பெண்களை உதவி பெறுபவர்களாக இல்லாமல் உதவி தருபவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது...
5. குடமுழுக்கு செய்ததை பெருமையாக சொல்கிறீர்கள்... அந்த குடும்பத்துக்கான அத்தனை வருமானமும் அந்த கோயில்கள் தான் தருகின்றன.. ஆனால் ஒரு முதல்வர் என்ற வகையில் எத்தனை குடைமுழுக்கு விழாக்களில் நீங்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா? அதே நேரங்களில் இப்தார் விருதுகளில் கலந்து கொண்டிருக்கிறீர்கள் கிறிஸ்துமஸ் விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறீர்கள் ஆக வேற்றுமை பார்ப்பது யார் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும் .
4. கடற்கரையில் கலைஞருக்கு பேனா வைக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ஆனால் திருப்பரங்குன்றத்தில் உயர்ந்து நிற்கும் விளக்கு தூணில் நீதிமன்றம் சொன்ன பின்பும் விளக்கேற்ற துணை நிற்க மறுப்பது எந்த விதத்தில் நியாயம் ? ஆக உரிமையை தட்டி கேட்டால் அவர்கள் மதவாதிகள் என்று முத்திரை குத்துகிறிர்கள்.. மதுரை மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள்.
5. மதுரை வைகை உங்கள் ஆட்சியில் குடிக்க கூட முடியாத அளவிற்கு மாசுபட்டு இருப்பதும்.. அசுத்தமான நகரங்கள் பட்டியலில் மதுரை இடம் பெற்றிருப்பதும் உங்கள் ஆட்சியில் தான்...
6. இன்று ராஜாஜி மருத்துவமனையில் 150. கோடி ரூபாயில் சிறப்பு சிகிச்சை கட்டடங்கள் மத்திய அரசின் உதவினால் கட்டப்பட்டிருக்கின்றன.. தஞ்சை திருநெல்வேலி மருத்துவமனைகளோடு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவு பெற்றது என்பதை மறந்து விட வேண்டாம்.
6. மதுரை மத்திய அரசினால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்பட்டு ஏறக்குறைய ரூ.1000 கோடி அதற்காக ஒதுக்கப்பட்டது.
7. உலகத் தரம் வாய்ந்த கல்வியை கொடுக்க வேண்டிய மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் எந்த அளவிற்கு மிகவும் நிர்வாக சீர்கேடினால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை மக்கள் அறிவார்கள்...
ஆக எது எப்படி இருந்தாலும்... தங்களுக்கு மதுரையை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை திருப்பரங்குன்ற முருகன் ஏற்படுத்தியிருக்கிறான் என்ற வகையில் மகிழ்ச்சி...
மதுரை மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என்று.. திருப்பரங்குன்றம் வேல் தங்களுக்கு நினைவு படுத்தி இருக்கிறது என்ற வகையில் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.