

சேலம்: சேலத்தில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
கேரளம், ஆந்திரம், புதுச்சேரி மாநிலங்களைப் போல் தமிழக அரசு சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற வாசகம் இல்லை என்று பெங்களூரூவில் உள்ள கர்நாடக தமிழ் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் குற்றம்சாட்டி பெங்களூர் வந்த தமிழ்நாடு அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற வாசகம் கொண்ட ஸ்டிக்கரை ஓட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டத்திற்கு செல்லும் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை வியாழக்கிழமை 20-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் ர் ஒட்டினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து அனைவரையும் கைது செய்த போலீசார், பேருந்தில் ஒட்டப்பட்ட தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் அகற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.