ராணிப்பேட்டை அருகே அரசு பேருந்தில் சிக்கி செவிலியர் பலி

அரசுப் பேருந்தில் சிக்கி அரசு மருத்துவமனை செவிலியர் பலியானது தொடர்பாக...
ராணிப்பேட்டை அருகே அரசு பேருந்தில் சிக்கி செவிலியர் பலி
ராணிப்பேட்டை அருகே அரசு பேருந்தில் சிக்கி செவிலியர் பலி
Updated on
1 min read

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே அரசுப் பேருந்தில் சிக்கி அரசு மருத்துவமனை செவிலியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர் காட்பாடி பகுதியை சேர்ந்த செவிலியர் கலைச்செல்வி. இவர் காட்பாடியில் இருந்து ராணிப்பேட்டைக்கு பேருந்தில் வந்திறங்கி அங்கிருந்து வாலாஜாபேட்டை செல்ல சக ஊழியரின் இருசக்கர வாகனத்தில் உதவி கேட்டு புதன்கிழமை பணிக்கு சென்றபோது ராணிப்பேட்டை காரைக்கூட்டுச் சாலையில் இருந்து வாலாஜாபேட்டை நோக்கி சென்ற போது ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனை எதிரே நிலை தடுமாறி சாலையில் தவறி விழுந்துள்ளார். அப்போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து செவிலியர் மீது மோதி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இருசக்கர வாகனத்தை ஒட்டி சென்ற சக ஊழியருக்கு சிறு காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வீட்டிலிருந்து வழக்கம்போல் பணிக்கு வந்த செவிலியர் பாதி வழியில் எதிர்பாராதவிதமாக பேருந்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary

A nurse was killed after being hit by a government bus near Ranipet

ராணிப்பேட்டை அருகே அரசு பேருந்தில் சிக்கி செவிலியர் பலி
மகளிர் சுய உதவிக் குழுக்களின் மதி உணவுத் திருவிழா டிச.28 வரை நீட்டிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com