கரூா் கூட்ட நெரிசல் பலி விவகாரம்: தவெக நிா்வாகிகளுக்கு சிபிஐ அழைப்பாணை!

கரூா் கூட்டல் நெரிசல் உயிரிழப்பு வழக்கு தொடா்பான விசாரணைக்கு தில்லி அலுவலகத்தில் ஆஜராகுமாறு தவெக நிா்வாகிகள் மற்றும் கரூா் மாவட்ட காவல் துறையினருக்கு சிபிஐ அழைப்பாணை...
கரூரில் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் கடுமையான கூட்ட நெரிசல்...
கரூரில் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் கடுமையான கூட்ட நெரிசல்...
Updated on
1 min read

கரூா் கூட்டல் நெரிசல் உயிரிழப்பு வழக்கு தொடா்பான விசாரணைக்கு தில்லி அலுவலகத்தில் ஆஜராகுமாறு தவெக நிா்வாகிகள் மற்றும் கரூா் மாவட்ட காவல் துறையினர் உள்பட 8 பேருக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.

கரூரில் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-இல் நடைபெற்ற தவெக தலைவா் விஜய்யின் பிரசாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். மேலும் 110 போ் காயமடைந்தனா். இச்சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதையடுத்து கரூரில் முகாமிட்ட சிபிஐ அதிகாரிகள், அங்கு கூட்டம் நடைபெற்ற இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் களவிசாரணை மேற்கொண்டனா். மேலும், தவெக பொதுச்செயலா் என்.ஆனந்த், இணை பொதுச்செயலா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள், காவல் துறையினா் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினா்.

முதல்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட விசாரணைக்காக தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த், தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலா் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச்செயலா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா், கரூா் மாவட்டச் செயலா் மதியழகன் மற்றும் கரூா் மாவட்ட காவல் துறை உயா் அதிகாரிகள் உள்ளிட்டோா் வருகிற டிச.29-ஆம் தேதி தில்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி சிபிஐ தரப்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், தவெக தலைவர் விஜய்க்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஜனவரி முதல் வாரத்தில் தில்லி அலுவலகத்தில் நேரில் ஆஜராவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

The CBI has issued summons to TVk party functionaries and Karur district police officials to appear at their Delhi office for questioning in connection with the Karur stampede death case.

கரூரில் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் கடுமையான கூட்ட நெரிசல்...
சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம்: மறுவாழ்வு பெற்ற மகாராஷ்டிர இளைஞா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com