இங்கிலாந்து குடிமகனான பின்னர் உத்தரப்பிரதேசத்தில் அரசு ஊதியம் பெற்றது எப்படி?

இங்கிலாந்து குடிமகனான பின்னரும் அங்கிருந்தவாறு உத்தரப்பிரதேசத்தில் அரசு உதவி பெறும் மதரசா ஒன்​றில் உதவி ஆசிரிய​ராக பணி​யாற்​றி வருவதாக ஊதியம் பெற்று வந்த சம்பவம் தொடர்பாக...
அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை
Updated on
2 min read

இங்கிலாந்து குடிமகனான பின்னரும் அங்கிருந்தவாறு உத்தரப்பிரதேசத்தில் அரசு உதவி பெறும் மதரசா ஒன்​றில் உதவி ஆசிரிய​ராக பணி​யாற்​றி வருவதாக ஊதியம் பெற்று வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னௌ: உத்தரப்பிரதேசத்தின் ஆசம்​கரை சேர்ந்தவர் மௌலானா சம்​சுல் ஹூடா கான். 1984-இல் அரசு உதவி பெறும் மதரசா ஒன்​றில் உதவி ஆசிரிய​ராக பணி​யாற்​றி​னார். தொடர்ந்து மருத்​துவ விடுப்பு எடுத்​தும், சர்​வீஸ் ஆவணங்​களை புதுப்​பித்​து வந்தவர், 2017-இல் முழுப் பலன்​களு​டன் விருப்ப ஓய்வு பெற்​றுள்ளார்.

ஆனால், ஹுடா 2007-இல் இங்​கிலாந்​தில் குடியேறி 2013-இல் அந்​நாட்டு குடி​யுரிமை பெற்​றுள்​ளார். இருப்பினும், அவர் இந்தியக் குடிமகனாக இல்லாதபோதும், வெளிநாட்டில் வசித்தபடியே ஆசிரியர் பணியில் இல்லாதபோதும், 2013 முதல் 2017 வரை ஓய்​வூ​தி​யப் பலன்​கள் தவிர, தொடர்ந்து சம்​பளம் பெற்​று வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்​பாக அவருக்கு உதவிய சிறு​பான்​மை​யினர் நலத்​துறை​யின் 4 மூத்த அதி​காரி​களை உத்தரப்பிரதேச அரசு கடந்த நவம்​பர் 22 ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்​துள்​ளது.

இதுதொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில், பாகிஸ்​தான் மத அமைப்​பு​களு​டன் ஹுடா கானுக்கு தொடர்பு இருப்​பதும், 20 ஆண்டுகளாக, அவர் பல வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளதாகவும், இந்தியாவில் உள்ள 7-8 வங்கிக் கணக்குகள் மூலம் பல கோடி நிதியைப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அவர் ரூ.30 கோடிக்கு அதிகமான சொத்​துகள் வாங்கி குவித்​திருப்​பது மற்​றும் சந்​தேகத்​திற்​குரிய நிறு​வனங்​களிடம் இருந்து அவரது வங்​கிக் கணக்​குக்கு ரூ.5 கோடி வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர் ராஜா ஃபவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மதரசாக்களுக்கு நிதி அனுப்பியதாகவும், அந்த நிறுவனம் ஒரு தீவிரவாத சித்தாந்தத்தை ஊக்குவித்ததாகவும் கூறப்படுகிறது. அவர் ஆசம்கர் மற்றும் சந்த் கபீர் நகரில் இரண்டு மதரசாக்களை நிறுவியிருந்ததகாவும், அவற்றின் பதிவுகள் பின்னர் அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் மீது சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை சட்​டத்​தின் கீழ் அமலாக்​கத் துறை வழக்​குப் பதிவு செய்​து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவரது வங்​கிக் கணக்​கு​கள் மற்​றும் வெளி​நாட்டு முதலீடு​கள், பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுடன் அவருக்கு உள்ள தொடர்புகள் குறித்து ஆய்வு செய்து வரு​கிறது.

"மௌலானா சம்​சுல் ஹூடா கான் தீவிரவாத சித்தாந்தத்தை ஊக்குவித்ததாகவும், மதக் கல்வி என்ற போர்வையில் சட்டவிரோத நிதி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது" என்றும் அவர் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான தவாத்-இ-இஸ்லாமியில் இருந்து வருவதாக நம்பப்படுகிறது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Summary

The Enforcement Directorate has registered a money laundering case against Maulana Shamsul Huda Khan, a UK-based radical Islamic preacher from Uttar Pradesh’s Azamgarh, the agency said on Friday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com