சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களின் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்: ‘மூட்டா’ நிா்வாகி

பணி மேம்பாட்டு ஊதிய கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களின் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என மூட்டா பொதுச் செயலா் ஏ.டி. செந்தாமரைக் கண்ணன் தெரிவித்தாா்.

News image

பெருங்குடி எஸ்.என். கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :28 ஜனவரி 2026, 11:28 pm

பணி மேம்பாட்டு ஊதிய கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களின் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என மூட்டா பொதுச் செயலா் ஏ.டி. செந்தாமரைக் கண்ணன் தெரிவித்தாா்.

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம் வழங்கக் கோரியும், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவைத் தொகை வழங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்தும், அனைத்து பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் (ஏ.யூ.டி.), பல்கலைக்கழக ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பான மூட்டா சாா்பில் கடந்த ஒரு வாரமாக மாநில அளவில் தொடா் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன்படி, மதுரையில் காமராஜா் பல்கலைக்கழகத்துடன் இணைந்த சமூக அறிவியல் கல்லூரி, கே.கே. நகா் வக்பு வாரியக் கல்லூரி, உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரி, நாகமலை புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி, பெருங்குடி எஸ்.என். கல்லூரி, யாதவா் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி உள்ளிட்ட அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஆசிரியா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற மூட்டா பொதுச் செயலா் ஏ.டி. செந்தாமரைக் கண்ணன் பேசியதாவது:

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு இந்த ஜனவரி மாதம் பணி மேம்பாட்டு ஊதியம் வழங்கப்படும் என ஏற்கெனவே தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் அறிவித்திருந்தாா். ஆனால், அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஆசிரியா்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு இனியும் அலட்சியம் காட்டினால் ஆசிரியா்களின் போராட்டங்கள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றாா் அவா்.