கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை.யில் மலர்க் கண்காட்சி!

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை.யில் மலர்க் கண்காட்சி தொடங்கியது.
மலர்க் கண்காட்சி
மலர்க் கண்காட்சி
Published on
Updated on
2 min read

கோவை : கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 7-வது மலர் கண்காட்சித் தொடங்கியது.

இந்த மலர்க் கண்காட்சியை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர் கே.பன்னீர் செல்வம், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, இணைவேந்தர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் தட்சிணாமூர்த்தி, துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி உரையாற்றும் போது, வேளாண்மைத் துறையில் கோவை முதல் இடம் பெற்ற நிலையில், தொழில் துறையிலும் முதலிடம், கல்வியில் கோவை முதலிடம், மருத்துவத் துறையிலும் கோவை முதலிடம், இப்படியாக அத்தனை துறைகளிலுமே தமிழ்நாட்டில் கோவை முதல் இடத்தில் இருக்கிறது.

இப்படி இருக்கையில் முதலமைச்சர் கோவைக்கு தனி கவனத்தை செலுத்தி, பல்வேறு திட்டங்களையும், அரசு நிதிகளையும் வழங்கி வருகிறார். குறிப்பாக வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை முதன் முறையாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யக் கூடிய அந்த வாய்ப்பினை, வழங்கி வேளாண் துறை அமைச்சர் தாக்கல் செய்தார்.

இந்தியாவிலேயே வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது தமிழகம் தான். 10 ஆண்டு, 20 ஆண்டு என இலவச மின்சாரத்திற்கு பதிவு செய்து காத்து இருந்த விவசாயிகளுக்கு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி இருக்கிறார்.

ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே மூன்று வேளாண் கல்லூரிகள், அமைக்கப்பட்டு கல்லூரி நடந்து கொண்டு இருக்கிறது.

கோவையின் தேவைகளை முதல்வரிடம் எடுத்துச் சொல்லும் பொழுது, நன்கு உணர்ந்து முதல்வர் கோவைக்கு நிதிகளை வழங்கி வருகிறார். இதுவரை இல்லாத அளவுக்கு கோவை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 860 கிலோ மீட்டர் அளவுக்கு 415 கோடி மதிப்பிலான தார் சாலைகள் இந்த மூன்று ஆண்டுகளில் அமைக்கப்பட்டு உள்ளது.மேலும் கூடுதலாக நிதிகள் தேவை என்றவுடன் 200 கோடி ரூபாய் நிதியை சிறப்பு நிதியாக ஒதுக்கினார். இன்னும் தேவை இருந்தால் வழங்குவதற்கு தயார் என்றும் கூறியிருக்கிறார்.

ஏறத்தாழ ஐந்து நாள்கள் நடைபெறுகிற இந்த மலர்க் கண்காட்சி, ஒரு லட்சம் மலர்களால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஐந்து நாள்களும் கோவை மாவட்ட மக்கள் மற்றும் அருகாமையில் இருக்கக் கூடிய மாவட்ட மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com