மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

86 ஆயிரம் மக்களுக்கு பட்டா வழங்க ஒப்புதல்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 86 ஆயிரம் மக்களுக்குப் பட்டா வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

News image
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
Updated On :10 பிப்ரவரி 2025, 11:43 am

DIN

தமிழ்நாட்டில் 86 ஆயிரம் மக்களுக்குப் பட்டா வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கி ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சர்க்கார் பட்டா என்ற பெயரில் உள்ள பட்டாக்களை உரிமையாளர்களின் பெயரிலேயே மாற்றுவதற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், அடுத்த 6 மாதத்துக்குள் இந்த பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலமாக தமிழகத்தில் புறம்போக்கு பகுதிகளில் நீண்டகாலமாக இருந்துவருபவர்கள் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு!

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் “பெல்ட் ஏரியாக்களில்” ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்துவரும் 29,187 பேர்,

மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் - நகராட்சிகள் - மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க இன்றைய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளோம்.

6 மாதங்களில் இதனைச் செய்து முடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவுள்ளோம்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன!" என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.