
முகூர்த்த நாளான நேற்று(பிப். 10) ஒரேநாளில் ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக பத்திரப்பதிவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
ஆவணங்கள் அதிகமாக பதிவு செய்யப்படுவதால் பத்திரப்பதிவுத் துறை அலுவலகங்களில் முகூர்த்த நாளன்று கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்று(பிப். 10) ஒரேநாளில் பத்திரப்பதிவுத் துறை ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
2024-25 ஆம் நிதியாண்டில் டிச. 5 ஆம் தேதி அதிகபட்சமாக ரூ. 238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது அதிகபட்ச தொகையாக பிப். 10 அன்று ரூ. 237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று பதிவுத் துறை கூறியுள்ளது.
இதையும் படிக்க | தவெக நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை!
தைப்பூசத்தையொட்டி இன்று(பிப். 11) அரசு விடுமுறை நாள் எனினும், நல்ல நாள் என்பதால் பத்திரப்பதிவுத் துறை அலுவலகங்கள் இன்று செயல்பட்டு வருகின்றன.
இன்று காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு நடைபெறும் வரை அலுவலங்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.