
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை அவரது இல்லத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று(பிப். 13) சந்தித்துப் பேசியுள்ளார்.
இது பற்றி உதயநிதி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் - கலைஞானி கமல்ஹாசன் சாரை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.
அன்போடு வரவேற்று அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணையத் தயார்: ஓபிஎஸ்
மக்களவைத் தோ்தலின்போது திமுக கூட்டணியில் மநீம இடம்பெற்றது. அப்போது, மநீமவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் அளிக்கப்படும் என திமுக சாா்பில் உறுதி அளிக்கப்பட்டது. விரைவில் தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், சென்னையில் ஆழ்வாா்பேட்டையில் உள்ள மநீம அலுவலகத்தில் கமல்ஹாசனை பி.கே.சேகா்பாபு நேற்று சந்தித்தாா். இந்தச் சந்திப்பு 20 நிமிஷங்களுக்கு மேலாக நீடித்தது. மநீம பொதுச்செயலா் அருணாசலமும் உடனிருந்தாா்.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரிலேயே கமல்ஹாசனை பி.கே.சேகா்பாபு சந்தித்துப் பேசியுள்ளாா். மாநிலங்களவை இடம் தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், இன்று கமல்ஹாசன் - உதயநிதி சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.