கோப்புப் படம்
கோப்புப் படம்

பல்கலைக்கழக விடுதியில் உணவருந்திய 50 மாணவிகளுக்கு உடல்நல பாதிப்பு!

மத்தியப் பிரதேசத்தில் பல்கலைக்கழக விடுதியில் உணவருந்திய மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதைப் பற்றி...
Published on

மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அனுப்பூர் மாவட்டத்திலுள்ள இந்திரா காந்தி தேசிய பழங்குடியின பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தங்கியுள்ள மாணவிகள், நேற்று (பிப்.25) இரவு அங்கு உணவு சாப்பிட்டு தங்களது அறைக்கு சென்றுள்ளனர். பின்னர், இரவு 11 மணியளவில் அங்குள்ள மாணவிகளில் 50க்கும் மேற்பட்டோருக்கு தலை வலி, வயிற்று வலி மற்றும் தொடர் வாந்தி ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். இரவு உணவாக உருளைக் கிழங்கு, காளிஃபிளவர் பொறியல், அரிசி சாதம், ரொட்டி மற்றும் தால் ஆகியவை வழங்கப்பட்டதாகவும், அதில் அவர்கள் சாப்பிட்ட உருளைக் கிழங்கு பொறியல்தான் தங்களது உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கான காரணம் என மாணவிகளில் சிலர் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க: சம்பல் வழக்கு: மசூதி அருகேயுள்ள கிணற்றைப் பராமரிக்க உ.பி. அரசு கோரிக்கை!

இதுகுறித்து, பல்கலைக்கழகத்தின் செய்தி தொடர்பாளர் ராஜ்னீஷ் திரிபாதி கூறுகையில், உணவு தொற்றினால் மாணவிகளுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டதாகவும், அவர்களில் யாருக்கும் பல்கலைக்கழகத்திற்கு வெளியே சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த சிகிச்சைக்கு பின்னர் மாணவிகள் அனைவரும் அவர்களது அறைக்கு ஓய்வு எடுக்க அனுப்பபபட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com