கோப்புப் படம்
கோப்புப் படம்

புலி தாக்கியதில் 3 பேர் படுகாயம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் புலி தாக்கியதில் 3 பேர் படுகாயமடைந்ததைப் பற்றி...
Published on

ராஜஸ்தான் மாநிலம் தவுஸா மாவட்டத்தில் புலி தாக்கியதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அம்மாநிலத்தின் அல்வார் மாவட்டத்தின் சரிஸ்கா வனப்பகுதியிலிருந்து ஒரு புலியானது தப்பித்து நேற்று (டிச.31) இரவு தவுஸா மாவட்டத்தினுள் புகுந்துள்ளது. பின்னர் அங்குள்ள மஹுகுர்து கிராமத்தின் கொலி மொஹல்லா பகுதியிலுள்ள ஒரு புதரினுள் பதுங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்று (ஜன.1) அதிகாலை புலி பதுங்கியிருப்பது அறியாமல் அங்கு வந்த உகா மகாவர் (வயது-45) என்ற பெண்ணை அந்த புலி பின்னால் இருந்து தாக்கியுள்ளது.

இதையும் படிக்க: மும்பையில் கைதான 8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை!

அந்த பெண்ணின் அலறல் சட்டம் கேட்டு அங்கு வந்த வினோத் மீனா (42) மற்றும் பாபுலால் மீனா (48) ஆகிய இருவரும் அவரை காப்பாற்ற தடிகளைக் கொண்டு புலியை தாக்கியுள்ளனர். ஆனால், அந்த புலி அவர்களையும் தாக்கியுள்ளது. இதில் மூவரும் படுகாயமடைந்துள்ளனர்.

பின்னர் அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவர்கள் மூவரையும் மீட்டு ஜெய்பூரிலுள்ள சவாய் மண் சிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தகவலறிந்து அங்கு விரைந்த அல்வார் வனத்துறை அதிகாரிகள் மூவரை தாக்கிய புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com