மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

தொழிற்சாலையில் வெடி விபத்து! ஒருவர் பலி!

தெலங்கானா மாநிலத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியானதைப் பற்றி..

கோப்புப் படம்

Published On :

தெலங்கானா மாநிலத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தினால் ஒருவர் பலியாகியுள்ளார்.

அம்மாநிலத்தின் யாதாத்திரி-புவனகிரி மாவட்டத்திலுள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று (ஜன.4) காலை ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணிப்புரியும் தொழிலாளி ஒருவர் பலியாகினார். மேலும், மற்றொரு தொழிலாளி படுகாயமடைந்துள்ளார்.

படுகாயம் அடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் அவர் தற்போது நலமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அம்மாநில காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வெடிக்கும் தன்மையுடைய பொருள்களை உற்பத்தி செய்யும்போது இந்த விபத்து நிகழ்ந்திருக்கக் கூடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் மெக்னீசியம் போன்ற தாது பொருள்கள் பயன்ப்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், வெடிக்கும் அபாயமுள்ள மெக்னீசியம் அங்கு இருப்பதினால் வெடி விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், விசாரணை மேற்கொள்ளப்பட்டு நிர்வாகம் தரப்பில் ஏதேனும் அலட்சியப்போக்குடன் செயல்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.