47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோவை பத்திரிகையாளர் மன்றத்தின் காலண்டர் வெளியீட்டு விழா!

கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான காலண்டர், டைரி வெளியீட்டு விழா மற்றும் பொங்கல் விழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

News image
கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான காலண்டர், டைரி வெளியீட்டு விழா மற்றும் பொங்கல் விழா
Updated On :5 ஜனவரி 2025, 4:32 pm

DIN

கோவை: கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான காலண்டர், டைரி வெளியீட்டு விழா மற்றும் பொங்கல் விழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

கோவை ஆவாரம்பாளையம் எஸ்என்ஆர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பத்திரிகையாளர் மன்றத்தின் காலண்டர், டைரி ஆகியவற்றை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் எஸ்என்ஆர் சன்ஸ் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், கொடிசியா தலைவர் கார்த்திகேயன், கற்பகம் கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அதிகாரி ஆதிபாண்டியன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா, மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் ஜே.முகமது ரஃபி, அன்னபூர்ணா நிறுவனத்தின் மேலாளர் (பிராண்டு) வீஜே, சேரன் குழும பொது மேலாளர் குமார், ஏஜி'ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவுத் தலைவர் ஃப்ரீடா, ஜிகேஎன்எம் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு மேலாளர் கோகுல், ட்ரீம்ஸ் அட்வர்டைசிங் நிறுவன நிர்வாகி பிஜு, ஆனந்தகுமார் ஈவென்ட் நிறுவன நிர்வாகி செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் கடந்த ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அழிந்து வரும் உயிரினங்களை ஆவணப்படுத்தும் வகையிலான ஓவியங்கள் அடங்கிய காலண்டர் வெளியிடப்பட்ட நிலையில்,அது பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

அந்த வகையில் நிகழாண்டு 'காஞ்சிமாநதி' என்ற கருப்பொருளில் நொய்யல் நதியை ஆவணப்படுத்தும் வகையில் பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் எடுத்த நொய்யல் நதியின் புகைப்படங்கள் அடங்கிய காலண்டர் தயாரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.