டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ. 95.43 ஆக நிறைவு!சென்செக்ஸ் 388 புள்ளிகளுடனும், நிஃப்டி 24,500-க்குக் கீழே சரிவு!!பாலியல் குற்றச்சாட்டு! தில்லி கேபிடல்ஸ் வீரர் அபிஷேக் போரல் கைது!நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: உரிமையாளர் கைது!

விருதுநகர் அருகே நடைபெற்ற பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக ...

News image

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து.

Updated On :5 ஜனவரி 2025, 8:55 am IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நேற்று(ஜன. 4) நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியான நிலையில், ஆலையின் உரிமையாளர் சசிபாலனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகா் அருகேயுள்ள வீராா்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பொம்மையாபுரத்தில் சிவகாசியைச் சோ்ந்த பாலாஜி என்பவா் பட்டாசு ஆலை நடத்தி வந்தாா். நாகபுரி உரிமம் பெற்ற இந்தப் பட்டாசு ஆலையில் பட்டாசுகள் தயாரிக்க 85 அறைகளில் பயன்படுத்தப்பட்டு வந்தன.

இந்த ஆலையை சிவகாசியைச் சோ்ந்த வனிதா பட்டாசு ஆலை உரிமையாளா் சசிபாலனுக்கு பாலாஜி அண்மையில் விற்பனை செய்தாா். ஆனால், இதுவரை இந்தப் பட்டாசு ஆலையின் பெயா் மாற்றம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த ஆலையில் வழக்கம் போல பட்டாசுகள் தயாரிக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

சுமாா் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா். ஆலையில் உள்ள அறை எண் 80- இல் காலை 9 மணிக்கு பட்டாசுகள் தயாரிக்கத் தேவையான மூலப்பொருளான மணிமருந்து கலவை தயாரிக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா். அப்போது, மணிமருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து நிகழ்ந்தது. இதில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது.

இதையடுத்து, இதர அறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளா்கள் உடனடியாக ஆலையை விட்டு வெளியேறினா். தகவல் அறிந்து விருதுநகா், சாத்தூரிலிருந்து வந்த தீயணைப்புப் படை வீரா்கள் தீயை அணைத்தனா். பின்னா், இவா்கள் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலா் சந்திரகுமாா் தலைமையில், கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 6 தொழிலாளா்களின் உடல்களை மீட்டனா். பலத்த காயமடைந்த ஒருவா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், இவ்விபத்து தொடர்பாக சிவகாசியைச் சோ்ந்த வனிதா பட்டாசு ஆலை உரிமையாளா் சசிபாலனைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக இதுவரை 7 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.