இனி ஒரே அட்டையில் மெட்ரோ, மாநகரப் பேருந்தில் பயணிக்கலாம்!

’சிங்கார சென்னை’ பயண அட்டையைப் பயன்படுத்தி மெட்ரோ ரயில் மற்றும் மாநகரப் பேருந்துகளில் பயணிக்கலாம்.
சிங்கார சென்னை பயண அட்டை
சிங்கார சென்னை பயண அட்டை
Published on
Updated on
1 min read

’சிங்கார சென்னை’ பயண அட்டையைப் பயன்படுத்தி மெட்ரோ ரயில் மற்றும் மாநகரப் பேருந்துகளில் பயணிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாநகரப் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில், பாரத ஸ்டேட் வங்கி (SBI) மூலம் சிங்கார சென்னை பயண அட்டையை பொது மக்கள் பயன்பாட்டிற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் இன்று(ஜன. 6) தொடக்கி வைத்தார்.

இதற்கு முன்னர், சிங்கார சென்னை பயண அட்டையானது சென்னை மெட்ரோ ரயில்களில் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது மாநகரப் பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறுகையில், ”மெட்ரோ ரயில் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ‘என்சிஎம்சி’ எனப்படும் பொதுப் பயன்பாட்டுக்கான பயண அட்டை மூலம் பயணச்சீட்டு பெறும் திட்டத்தை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடக்கி வைத்தார்.

இதையும் படிக்க: மாநகரப் பேருந்துகளில் சிங்கார சென்னை பயண அட்டை: அமைச்சர் தொடக்கி வைத்தார்!

‘என்சிஎம்சி’ நெறிமுறைகளுக்கு உள்பட்ட வரும் அனைத்து போக்குவரத்தையும் இந்த சிங்கார சென்னை பயண அட்டையைப் பயன்படுத்தலாம். மற்ற மாநிலங்களில் உள்ள மெட்ரோ போன்றவற்றிலும் ‘என்சிஎம்சி’ நெறிமுறைகளுக்கு உள்பட்டு இருந்தால் இந்த பயண அட்டையைப் பயன்படுத்தலாம்.

புறநகர் ரயில்களில் ‘என்சிஎம்சி’ இணையும்போது இதே அட்டையை புறநகர் ரயில்களில் பயன்படுத்தலாம். குறைந்தபட்சம் ரூ.100 வரை ரீசார்ஜ் செய்து பயன்படுத்தலாம்” என்று தெரிவித்தார்.

சிங்கார சென்னை பயண அட்டையின் சிறப்பு அம்சங்கள்:

கட்டணமின்றி வழங்கப்படும் சிங்கார சென்னை பயண அட்டையை, ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆன்லைன் போர்ட்டல்கள், கைப்பேசி பயன்பாடுகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மாநகர் போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு விற்பனை மையங்கள் போன்ற பல்வேறு வழிகளில் இந்த அட்டையை எளிதாக ரீசார்ஜ் செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் இந்த சிங்கார சென்னை பயண அட்டையை பேருந்துகளில் நடத்துநர்களிடமும் ரீசார்ஜ் செய்ய விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.