காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டி? நாளை முக்கியக் கூட்டம்!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை
Updated On :7 ஜனவரி 2025, 10:18 am

DIN

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிச. 14 ஆம் தேதி காலமானார். பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது,

இதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று(ஜன . 7) அறிவித்துள்ளது. பிப். 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரஸுக்கே ஒதுக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை காங்கிரஸ் விரைவில் அறிவிக்கவுள்ளது.

இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நாளை(ஜன. 8) இதுதொடர்பாக முக்கியக் கூட்டம் நடைபெற உள்ளது. இடைத்தேர்தல் கூட்டணி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.