பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

லெபனான்: ஒப்பந்தத்தை மீறி தாக்குதலைத் தொடரும் இஸ்ரேல்! 3 பேர் பலி!

லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 3 பேர் பலியாகினர்..

News image
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் - (கோப்புப் படம்)
Updated On :13 ஜனவரி 2025, 6:28 am

DIN

லெபனான் நாட்டின் தெற்கு மாகாணத்தில் மக்கள் கூட்டத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 பேர் பலியாகினர்.

கடந்த ஜன.11 அன்று தெற்கு லெபனானின் ஷீபா நகரத்தின் பஸ்திரா பகுதியிலுள்ள ஒரு பண்ணையின் அருகில் நின்றுக் கொண்டிருந்த மக்களின் மீது இஸ்ரேல் நாட்டிற்குச் சொந்தமான டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 பேர் பலியானதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேலின் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளதாவது, லெபனான் நாட்டில் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஷீபா பண்ணைகளின் அருகில் சந்தேகப்படும்படியான நபர்களின் மீது டிரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இது பாதுகாப்பிற்காக நடத்தப்பட்ட தாக்குதல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

முன்னதாக, கடந்த 2024 நவம்பர் மாதம் அமெரிக்க மற்றும் பிரான்ஸ் நாடுகளின் உதவியோடு லெபனானின் ஹெஸ்பொல்லா போராளி குழுவுக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் மத்தியில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி எந்தவோரு தாக்குதல்களும் நடத்தப்படக்கூடாது என்றும், 60 நாள்களுக்குள் இஸ்ரேல் ராணுவம் லெபனான் நாட்டிலிருந்து முற்றிலுமாக வெளியேறிவிட வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், அந்த ஒப்பந்தத்தை முதல் முறையாக மீறி இஸ்ரேல் ராணுவம் லெபனான் நாட்டின் மீது நேற்று (ஜன.12) இரவு முதல் அதன் தொடர் தாக்குதல்களைத் துவங்கியுள்ளது. கிழக்கு லெபனானிலுள்ள பால்பெக் நகரத்தின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. மேலும், தெற்கு லெபனானின் மீதும் 6 அதிபயங்கர வான்வழித் தாக்குதல்களை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.