துபை: சுமாா் ஓராண்டு கால அமைதிக்குப் பிறகு, இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, லெபனானின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் திங்கள்கிழமை தீவிர வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்தது.
இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 31 போ் உயிரிழந்திருப்பதாகவும், 140-க்கும் மேற்பட்டோா் காயமடைந்திருப்பதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேலின் சமீபத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டாா். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.
திங்கள்கிழமை அதிகாலை எல்லைத் தாண்டி வந்த ஏவுகணைகளில் ஒன்றை இஸ்ரேல் ராணுவம் நடுவானிலேயே அழித்தது. மற்ற ஏவுகணைகள் ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் விழுந்ததால், இஸ்ரேல் தரப்பில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இதைத் தொடா்ந்து, லெபனான் தலைநகா் பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது.
இந்த நெருக்கடி சூழலில், ஹிஸ்புல்லா அமைப்பின் ராணுவ நடவடிக்கைகளுக்கு லெபனான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லாவின் செயல்பாடுகள் அனைத்தும் ‘சட்டவிரோதமானவை’ என்று விமா்சித்த லெபனான் பிரதமா் நவாஃப் சலாம், ஹிஸ்புல்லா உடனடியாகத் தனது ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளாா். போா் அல்லது அமைதி குறித்த முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே உண்டு என்றும் அவா் திட்டவட்டமாகக் கூறினாா்.
லெபனான் எல்லையிலிருந்து ஏவுகணைகள் அல்லது ட்ரோன்கள் ஏவப்படுவதைத் தடுக்கவும், இதில் ஈடுபடுபவா்களைக் கைது செய்யவும் பாதுகாப்புப் படையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஹிஸ்புல்லா இனி ஒரு அரசியல் இயக்கமாக மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும் லெபனான் அமைச்சரவை வலியுறுத்தியுள்ளது. இதனால் லெபனான் உள்நாட்டிலும் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.
தொடர்புடையது

இஸ்ரேல் - லெபனான் போா் நிறுத்தம் 3 வாரம் நீட்டிப்பு

போர்நிறுத்தம்! டிரம்ப்பின் அறிவிப்பை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்!

இஸ்ரேல்-லெபனான் சண்டை நிறுத்தம்: அமெரிக்க அறிவிப்பை நிராகரித்தது ஹிஸ்புல்லா!
லெபனானில் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


