தெற்கு லெபனானில் ஊடுருவியுள்ள இஸ்ரேல் படைகள், ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து தரைவழித் தாக்குதலைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் கொலைக்குப் பழிவாங்குவதாக, இஸ்ரேல் மீது ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினா் திங்கள்கிழமை அதிகாலை ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கினா்.
இதற்குப் பதிலடியாக ஹிஸ்புல்லாவின் உளவுத் தலைமையகம், ஆயுதக் கிடங்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தெற்கு லெபனானுக்குள் தரைப்படைகளை அனுப்புவது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இஸ்ரேலின் வடக்கு எல்லைக் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இந்த ‘முன்னெச்சரிக்கை’ பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதிகளில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளதோடு, வான்வழிப் பாதுகாப்பு கட்டமைப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. எல்லையோர இஸ்ரேல் மக்கள் இப்போதைக்கு வெளியேற்றப்பட மாட்டாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனான் ராணுவம் பின்வாங்கல்: இஸ்ரேலின் இந்த அதிரடி நகா்வைத் தொடா்ந்து, எல்லைப் பகுதிகளில் உள்ள தனது முக்கிய நிலைகளில் இருந்து லெபனான் நாட்டு ராணுவம் வெளியேறி வருவதாக அந்நாட்டு தேசிய செய்தி முகமை தெரிவித்துள்ளது.
52 போ் உயிரிழப்பு: லெபனானில் கடந்த 2 நாள்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், இதுவரை 40 போ் உயிரிழந்துள்ளனா்; 246 போ் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளில் சுமாா் 30,000-க்கும் மேற்பட்டோா் வீடுகளைவிட்டு வெளியேறி, தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனா்.
தொடர்புடையது

இஸ்ரேல்-லெபனான் சண்டை நிறுத்தம்: அமெரிக்க அறிவிப்பை நிராகரித்தது ஹிஸ்புல்லா!

லெபனான்-இஸ்ரேல் அமைதிப் பேச்சு: உடன்பாட்டுக்குக் கட்டுப்பட மாட்டோம் - ஹிஸ்புல்லா திட்டவட்டம்

லெபனானில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்- 89 போ் உயிரிழப்பு; போா்நிறுத்தத்தில் விரிசல்?
லெபனானில் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


