சட்டம் - ஒழுங்கு பிரச்னை: அமித் ஷாவிடம் அறிக்கை அளித்தார் தமிழக ஆளுநர் ஆர்லேகர்!கொளத்தூர் அரசுப் பள்ளி உணவுக் கூடத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!தவெக 6 மாத ஆட்சியில் 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ரூ. 1.14 லட்சம் கோடி முதலீடுகள்தமிழக காவல்துறை அதிரடி: 3 நாள்களில் 1,049 ரௌடிகள் கைதுதென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது!8 நாள்களில் ரூ. 1,000 கோடி வசூலித்த ராமாயணா!

நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள்.. 'டிரெயின்’ படத்தின் ’சிறப்பு விடியோ’ வெளியீடு!

இயக்குநர் மிஷ்கினின் திரைப்படத்தின் சிறப்பு விடியோ வெளியிடப்பட்டுள்ளதைப் பற்றி...

நடிகர் விஜய் சேதுபதி

Updated On :

நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜன.16) அவர் நடித்து வரும் இயக்குநர் மிஷ்கினின் “டிரெயின்” திரைப்படத்தின் சிறப்பு விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் மிஷ்கின் சமீப காலமாக நடிகராக வலம் வந்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது அவரது இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் ‘டிரெயின்’ திரைப்படம் உருவாகி வருகின்றது.

பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணுவின் ’வி க்ரியேஷ்ன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், நடிகை ஸ்ருதி ஹாசன், நரேன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பௌசியா பாத்திமாவின் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தின் படத்தொகுப்பை ஸ்ரீவத் கையாள்கிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் 47வது பிறந்தநாளான இன்று (ஜன.16) இந்த திரைப்படத்தின் ’சிறப்பு க்ளிம்ஸ்’ விடியோ படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த விடியோவில் ரயில் ஒன்றில் அவர் நடந்து செல்வதும், பின்னர் படத்தின் டப்பிங் பணியின் போது அவர் உணர்ச்சிப்பூர்வமாக வசனங்கள் பேசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இறுதியாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி அந்த விடியோ நிறைவடைகிறது.

முன்னதாக, கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும் ’விடுதலை - 2ம் பாகம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அவருக்கு சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது இயக்குநர் மிஷ்கினோடு அவர் இணைந்திருப்பது இருவரது ரசிகர்களுக்கும் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.