நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

‘யாத்திசை’ இயக்குநரின் அடுத்த படம் துவக்கம்!

யாத்திசை இயக்குநர் தரணி ராசேந்திரனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது...

Dinamani

Published On :20 ஜனவரி 2025, 2:17 pm IST

2023 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘யாத்திசை’ திரைப்படத்தின் இயக்குநர் தரணி ராசேந்திரனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்கான பூஜை நேற்று (ஜன.19) நடைபெற்றது.

நடிகர் குரு சோமசுந்தரம், அறிமுக நாயகன் செய்யோன் உள்பட பல புதுமுக நடிகர்களின் நடிப்பில் பழங்காலத் தமிழ் மன்னர்கள் மற்றும் தமிழ் மக்களின் வாழ்வியல் குறித்து வரலாற்று திரைப்படமாக உருவான ‘யாத்திசை’ கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது.

அப்போது, பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை என்றாலும் அந்த திரைப்படம் ஒடிடியில் வெளியான பின்னர் தமிழ் மக்களாலும், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்களினாலும் பெரிதும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், இயக்குநர் தரணி ராசேந்திரனின் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. ஜே.கே. பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தின் பூஜையும் அறிமுக நிகழ்ச்சியும் நேற்று (ஜன.19) நடைபெற்றது.

இந்த திரைப்படத்தில், ‘யாத்திசை’ நாயகன் செய்யோன், விடுதலை திரைப்படம் புகழ் பவானி, நடிகரும் இயக்குநருமான சமுத்திரகனி ஆகியோர் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது முந்தையப் படத்தின் போலவே இந்த திரைப்படமும் சவலான காட்சியமைப்பில் உருவாக உள்ளதாக இயக்குநர் தரணி தனது சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான விகடன் திரைப்பட விருதுகளில் யாத்திசை படக்குழுவிற்கு சிறந்த படக்குழுவிற்கான விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.