வேங்கைவயல்
வேங்கைவயல்

வேங்கைவயல் விவகாரம்: விசாரணை ஒத்திவைப்பு!

வேங்கைவயல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு.
Published on

வேங்கைவயல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில், குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. அதில், மூன்று பேர் மீது குற்றம்சாட்டி, சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.

வேங்கைவயல் பகுதியில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மூன்று பேரில், முரளிராஜா என்பவர் ஆயுதப்படைக் காவலராக பணியாற்றியவர்.

இவரிடம் ஏற்கனவே சிபிசிஐடி விசாரணை நடத்தி வந்தநிலையில் குற்றப்பத்திரிகையில் இவரது பெயரும் இடம்பெற்றுள்ளது.

இதையும் படிக்க: வேங்கைவயல் விவகாரத்தில் திடீர் திருப்பம்: குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேர் யார்?

இவ்வழக்கு இன்று(ஜன. 24) பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது சரியென்று மனுதாரர் ஒருவர் தெரிவித்தார்.

குற்றப்பத்திரிகையில் வன்கொடுமை சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை என்றும் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைக்கு விரிவான விளக்கம் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் மற்றொரு மனுதாரர் தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

அதற்கு , நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் அமர்வு, “நீதிமன்றத்தைப் பயன்படுத்தி அரசியல் செய்யக்கூடாது, விசாரணை முடிவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் வேறு நிவாரணம் வேண்டுமென்றால் கீழமை நீதிமன்றத்தை நாடலாம்” என்று மனுதாரருக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, அரசின் அறிக்கைக்கு மார்ச். 10 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு, விசாரணை மார்ச் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com