திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக அரிட்டாபட்டி செல்கிறார் முதல்வர்: அண்ணாமலை

இந்தியா கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த தில்லிக்குச் சென்றதை பொதுமக்கள் மறந்துவிடவில்லை - அண்ணாமலை.
Annamalai
அண்ணாமலை (கோப்புப்படம்)எக்ஸ்
Published on
Updated on
1 min read

திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக முதல்வர் ஸ்டாலின் அரிட்டாபட்டி செல்கிறார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக கடந்த 23-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதைத் தொடா்ந்து, அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த போராட்டக் குழுவினா் அமைச்சா் மூா்த்தி தலைமையில் தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஸ்டாலினை சனிக்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

அரிட்டாபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பாராட்டு விழாவுக்கும் முதல்வருக்கு அழைப்பு விடுத்தனா். இந்த நிலையில் அரிட்டாபட்டியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் மதுரை செல்கிறார்.

இதையும் படிக்க: முதல்வா் இன்று அரிட்டாப்பட்டி வருகை! பாதுகாக்கப்பட்ட மண்டலம் அறிவிப்பு வெளியாகுமா?

இது பற்றி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, பிரியாணி கடை, டீக்கடை என வரிசையாக மன்னிப்பு கேட்கச் சென்ற முதல்வர், ஆட்சிக்கு வந்த பின்னர், தென் தமிழகம் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானபோது கூட, அதைக் கண்டுகொள்ளாமல், இந்தியா கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த தில்லிக்குச் சென்றதை பொதுமக்கள் மறந்துவிடவில்லை.

தமிழகத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், வேங்கைவயல் பிரச்சினை தொடங்கி, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்முறை உள்பட, பொதுமக்கள் சந்தித்த பல்வேறு பிரச்னைகளின் போது, அங்கு சென்று ஆறுதல் கூறாத முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது, பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகள் நலனுக்காக, மதுரை டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ததும், திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக உடனடியாகக் கிளம்பிச் செல்கிறார் என்றால், இந்த “டிராமா மாடல்” அரசு எதற்கு முன்னுரிமை கொடுக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com