மணிப்பூர்: 6 ராக்கெட் குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூரில் 6 ராக்கெட் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதைப் பற்றி...
பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்த ராக்கெட் குண்டுகள் மற்றும் ஆயுதங்கள்.
பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்த ராக்கெட் குண்டுகள் மற்றும் ஆயுதங்கள்.
Published on
Updated on
1 min read

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் 6 ராக்கெட் குண்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

சூராசந்திரப்பூர் மாவட்டத்தின் ஹெங்லெப் காவல் நிலையக் கட்டுபாட்டிலுள்ள லோயிலம்கோட் மற்றும் நாலோன் பகுதியில் நேற்று (ஜன.28) பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட சோதனையின்போது 6 ராக்கெட் குண்டுகள் மற்றும் அதை ஏவக்கூடிய லாஞ்சர் ஒன்று மற்றும் ஒரு நாட்டு மோர்ட்டார் ஆயுதம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இத்துடன், 7.62 மி.மீ குறிபார்த்து சுடக்கூடிய துப்பாக்கி குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: ஜார்க்கண்டில் நக்சல் சுட்டுக்கொலை

இந்நிலையில், கிழக்கு இம்பால் மாவட்டத்தின் இன்கோல் கிராமத்தில் பொது மக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அப்பகுதியிலுள்ள கடைகளில் பணம் பறிப்பில் ஈடுபட்ட கே.சி.பி எனும் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கியும் அதன் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com