பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

2-ஆம் கட்ட தவெக மாவட்ட நிர்வாகிகள் பட்டியல்!

தவெக மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்ட விஜய்.

News image

தவெக தலைவா் விஜய்

கோப்புப் படம்

Updated On :29 ஜனவரி 2025, 12:31 pm

DIN

தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாம் கட்டமாக, 19 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் கடந்த ஜன.24 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்துக்கு 19 கட்சி மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டார்,

மேலும், சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 19 கட்சி மாவட்டங்களுக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தவெக தலைவர் விஜய் முன்னதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் 2-ஆம் கட்ட மாவட்ட பொறுப்பாளர்களின் பட்டியலை விஜய் வெளியிட்டுள்ளார்.

இது பற்றி தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாம் கட்டமாக, 19 கட்சி மாவட்டங்களுக்கு, கட்சி விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... https://dropbox.com/scl/fo/w3uvc48ljnlniyrqc5x0v/AO_PD9HpX94MhMeZjuNa7JM?rlkey=927a55eupvh0nocq4hi52dmvw&st=75kfq593&dl=0… என்ற லிங்க்கை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கட்சித் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.