மனைவியை சுட்டுக்கொன்று நாடகமாடிய நபர் கைது!
ஹரியாணாவில் மனைவியை சுட்டுக்கொன்று பொய் வழக்கு பதிவு செய்து நாடகமாடிய நபர் கைது செய்யப்பட்டதைப் பற்றி...


ஹரியாணா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் மனைவியை சுட்டுக்கொன்று பொய் வழக்குப் பதிவு செய்து நாடகமாடிய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
நூஹ் மாவட்டத்தின் ஹாஜிப்பூர் கௌஹேத்தா கிராமத்தைச் சேர்ந்த இனாயத் என்ற நபர், கடந்த ஜன.28 அன்று இரவு தனது வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஆயுதத்தை காட்டி மிரட்டி கொள்ளையடித்ததுடன், அவரது மனைவியான சுன்னதி (வயது 25) என்பவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சித்ததாகவும் அதற்கு சுன்னதி எதிர்ப்பு தெரிவித்ததினால் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பியோடியதாகவும் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இனாயத்தின் மீது சந்தேகித்த காவல் துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது மனைவியின் நடத்தையில் சந்தேகித்து அவரை சுட்டுக்கொலை செய்ததை இனாயத் ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர், அவரை கைது செய்த காவல் துறையினர் அவருக்கு கள்ளத்துப்பாக்கியை வழங்கிய ஷகீர் என்பவரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று (ஜன.29) ஷகீர் திர்வாடா நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் புன்ஹானா ஜுர்ஹெரா சாலைப் பகுதியில் போலீஸார் தடுப்புகளை அமைத்தனர்.
அப்போது, காவல் துறையினரை பார்த்த ஷகீர் தப்பித்து செல்ல முயற்சித்துள்ளார். மேலும், காவல் துறையினரை நோக்கி அவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதற்கு காவல் துறையினர் பதில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவரது காலில் குண்டு பாய்ந்து அவர் நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். பின்னர், அவர் கைது செய்யப்பட்டு காவல் துறையினரின் கண்கானிப்பில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னதாக, இனாயத்திற்கு ஆயுதம் வழங்கிய ஷகீரின் மீது ஏற்கனவே ஆயுதம் வைத்திருந்ததற்காகவும், வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்டதிற்காகவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...